வணிகம்

வர்த்தக பேச்சுவார்த்தைக்கு இந்திய அதிகாரிகள் குழு அமெரிக்கா பயணம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்​பந்தம் தொடர்பாக 5 சுற்​று பேச்​சு​வார்த்தை முடிந்த நிலை​யில், இந்​தி​ய பொருட்​களுக்கு 50% வரி விதிப்​ப​தாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​தார். இதனால் பேச்​சு​வார்த்​தை​ தடைபட்​டது.

இதனிடையே, இரு நாடு​களுக்கு இடையிலான வர்த்தக தடைகளைத் தீர்க்க தொடர்ந்து பேச்​சு​வார்த்தை நடத்​தப்​படும் என அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த பிரதமர் நரேந்​திர மோடி​யும், இந்த பேச்​சு​வார்த்​தையை விரை​வில் முடிக்க எங்​கள் குழுக்​கள் பணி​யாற்றி வருகின்றன என்று அறி​வித்​தார்.

கடந்த மாதம் மத்​திய வர்த்​தக அமைச்​சர் பியூஷ் கோயல் தலை​மையி​லான குழு அமெரிக்கா சென்று பேச்​சு​வார்த்​தை நடத்​தி​யது. இந்​நிலை​யில் இரு​நாட்டு வர்த்தக ஒப்​பந்​தம் (பிடிஏ) தொடர்​பாக பேச்​சு​வார்த்தை நடத்த இந்​தி​யக் குழு​வினர் இந்த வாரத்தில் அமெரிக்கா செல்​ல​வுள்​ளனர் என்று மத்​திய வெளி​யுறவுத்​துறை அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT