வணிகம்

தங்கம் விலை மேலும் உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?

அனலி

சென்னை: சென்னையில் இன்று (அக்.4) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,950-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் - ரஷ்யா போர், இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் உள்ளிட்ட காரணங்கள் தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தங்கம் விலை சமீப காலமாக தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்று காலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,950-க்கும், பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு பவுன் ரூ.87,600-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,65,000-க்கும் விற்பனையாகிறது.

கடந்த 1-ம் தேதி முதல் தங்கம் விலை நிலவரம்:

அக்.4 ஒருபவுன் ரூ.87,600

அக்.3 ஒரு பவுன் ரூ.87,200

அக்.2 ஒரு பவுன் ரூ.87,600

அக்.1 ஒரு பவுன் ரூ.87,600

SCROLL FOR NEXT