மெட்டா படம் 
வணிகம்

தங்கம் விலை சற்றே குறைந்தது: இன்றைய நிலவரம் என்ன?

தமிழினி

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.25) பவுனுக்கு ரூ.720 குறைந்து ஒரு பவுன் ரூ.84,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்​வ​தேச பொருளா​தாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில் தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து, தங்கத்தின் விலை தொடர்ந்து வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வருகிறது.

அதிலும் கடந்த திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் தங்கம் விலை கடுமையாக உயர்ந்து 85 ஆயிரத்தை தாண்டியது.

இந்த நிலையில், வியாழக்கிழமை சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.10,510-க்கும், பவுனுக்கு ரூ.720 குறைந்து ஒரு பவுன் ரூ.84,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று (செப்டம்பர் 24 ஆம் தேதி) தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.10,600க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து ஒரு பவுன் ரூ.84,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அடுத்தடுத்து இரண்டு நாட்கள் தங்கம் விலை குறைந்துள்ளது, அது சொற்ப அளவுதான் என்றாலும் கூட வாடிக்கையாளர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

வெள்ளியைப் பொறுத்தவரை கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு கிராம் ரூ.150 -க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.150க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

SCROLL FOR NEXT