வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்வு!

வேட்டையன்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக.26) பவுனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது.

தங்கத்தை மிகவும் பாதுகாப்பான முதலீடாக மக்கள் பார்க்கின்றனர். அதன் காரணமாக தங்கத்தை ஆபரணமாகவும் மற்றும் காசுகளாகவும் மக்கள் வாங்குவது வழக்கம். உலக அளவில் தங்கத்தை அதிகம் வாங்கும் முன்னணி நாடுகளில் இந்தியாவும் உள்ளது.

தங்கம் விலை சர்வதேச அளவிலான பொருளாதாரம் மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய காரணிகளாக உள்ளன.

இந்நிலையில், சென்​னை​யில் 22 காரட் ஆபரணத் தங்​கத்​தின் விலை இன்று ஒரு கிராம் ரூ.50 உயர்ந்து ரூ.9,355-க்கும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.74,840-க்கும் விற்பனை ஆகிறது. 24 காரட் சுத்த தங்​கம் பவுனுக்கு ரூ.81,640-க்கும், 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.61,920-க்கும் விற்பனை ஆகிறது.

வெள்ளி கிரா​முக்கு ரூ.1 குறைந்து ரூ.130-க்​கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1,30,000-க்​கும் விற்பனை ஆகிறது. கடந்த 20-ம் தேதி வெள்ளி ஒரு கிராம் ரூ.125 என விற்பனையானது. பின்னர் கடந்த 23-ம் தேதி ஒரு கிராம் விலை ரூ.130 என்ற நிலையை எட்டியது. நேற்று, வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ.131 என விற்பனையானது.

SCROLL FOR NEXT