வணிகம்

ரூ.74 ஆயிரத்தை தாண்டியது தங்கத்தின் விலை: கிராமுக்கு ரூ.105 உயர்வு

வெற்றி மயிலோன்

சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,285-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கியக் காரணிகளாக உள்ளன. அதனடிப்படையில், ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில், இன்று (ஜூலை 22) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,285-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.74,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.128-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,28,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT