வணிகம்

5 ஆண்டுகளில் சர்க்கரை நோயைவிட இதய நோய்க்கான மருந்துகள் விற்பனை 50 சதவீதம் அதிகரிப்பு!

செய்திப்பிரிவு

மும்பை: இந்தியாவில் இதய நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தற்போது இளைஞர்கள், சிறுவர், சிறுமிகள் கூட மாரடைப்பு போன்ற இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதுபோல் இளம் வயதில் இதய நோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதை உறுதி செய்வது போல் கடந்த 5 ஆண்டுகளில் இதய நோய் சிகிச்சைக்கான மருந்துகள் விற்பனை 50 சதவீதம் அதிகரித்துள்ளது.

கொலஸ்ட்ரால், செரிமான குழாயில் சிக்கல், தொற்று அல்லது சர்க்கரை நோய்களுக்கான மருந்துகள் விற்பனையை விட, கடந்த 5 ஆண்டுகளில் இதய நோய் சிகிச்சைகளுக்கான மருந்துகள் விற்பனை 50 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து இந்​தி​யா​வில் மருந்​துகள் விற்​பனை குறித்த ஆய்வை ‘பார்​மாரேக்’ நிறு​வனம் நடத்​தி​யுள்​ளது. நாட்​டின் பிரபல​மான 17 பார்மா நிறு​வனங்​கள் விற்​பனை செய்த மருந்​துகள் குறித்த புள்​ளி​விவரத்தை ஆய்வு செய்​த​தில் இந்த தகவல் தெரிய வந்​துள்​ளது.

கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் இதயம் சம்​பந்​தப்​பட்ட நோய்​களுக்​கான மருந்​துகளை ரூ.1,761 கோடிக்கு பார்மா நிறு​வனங்​கள் விற்​றுள்​ளன. அதன்​பின் கடந்த 2025-ம் ஆண்​டில் ரூ.2,645 கோடிக்கு மருந்​துகள் விற்​பனை​யாகி உள்​ளன. இந்த புள்​ளி​விவரத்​தின்​படி இதயம் சம்​பந்​தப்​பட்ட சிகிச்​சைக்​கான மருந்​துகள் ஆண்​டு​தோறும் சராசரி​யாக 10.7 சதவீதம் அதி​கரித்து வந்​துள்​ளன.

இதுகுறித்து நிபுணர்​கள் கூறும்​போது, ‘‘மூத்த குடிமக்​களின் எண்​ணிக்கை அதி​கரித்து வரு​வது, இதய நோய்​கள் குறித்த விழிப்​புணர்வு அதி​கரித்து வரு​வது, உயர் ரத்த அழுத்​தத்தை அளவிடு​வ​தில் புதிய அளவு​கோல்​கள் போன்​றவற்​றால் இதய நோய் சிகிச்​சைக்​கான மருந்​துகள் விற்​பனை அதி​கரித்​துள்​ளது. இதய நோய் அதி​கரித்து வரு​வது உண்​மை​தான். அதே​நேரத்​தில் இதய நோயை கண்​டறி​யும் அதிநவீன கருவி​கள் வரு​கை, இதய நோய் வராமல் தடுப்​ப​தற்​கான வழி​முறை​கள் போன்​றவை மேம்​பட்​டுள்​ளன’’ என்​கின்​றனர்.

மத்​திய அரசின் புள்​ளி​விவரத்​தில், நாட்​டில் ஏற்​படும் 63 சதவீத உயி​ரிழப்​பு​கள் எளி​தில் தொற்றா நோய்​களால் ஏற்​படு​கின்​றன. அதில் 27 சதவீதம் பேர் இதயம் சம்​பந்​தப்​பட்ட நோய்​களால் இறக்​கின்​றனர்​ என்​று ஆய்வில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT