ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக எஸ்.எஸ்.முந்த்ரா நியமிக்கப்பட்டிருக்கிறார். பேங்க் ஆப் பரோடாவின் தலைவராக இருந்த இவர் ரிசர்வ் வங்கியின் நான்காவது துணை கவர்னராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரது பதவிக்காலம் மூன்று வருடங்கள்.
புனே பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டம் பெற்ற இவர், பேங்க் ஆப் பரோடாவிலிருந்து தன் வங்கிப் பணியை ஆரம்பித்தார். கரன்சி நிர்வாகம், வங்கி மேற்பார்வை உள்ளிட்ட பிரிவுகளை இவர் கவனிப்பார் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக இருந்த கே.சி.சக்ரவர்த்தி கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வுபெற்றார். அவர் பொறுப்புக்கு இவர் வந்திருக்கிறார்.