வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்வு

அனலி

சென்னை: சென்னையில் இன்று (புதன்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு பவுன் ரூ.74,000-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு உலக நாடுகளின் வர்த்தக ரீதியான செயல்பாடும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

இந்நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 18) கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,250-க்கும் பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு பவுன் ரூ.74,000-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.122-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,22,000-க்கும் விற்பனையாகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT