கல்வி மற்றும் மருத்துவ அறுவை சிகிச்சைக்காக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எஸ்.டி. சிபுலால் ரூ. 36 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.
குழந்தைகளுக்கான இருதய அறுவை சிகிச்சை, முதியோர் உதவித் தொகை மற்றும் இயற்கை விவசாயம் உள்ளிட்டவற்றுக்கு இந்தத் தொகை பயன்படுத்தப்படும். சரோஜினி தாமோதரன் அறக்கட்டளை மற்றும் அத்வைத் அறக்கட்டளைகளுக்கு இத்தொகையை அவர் வழங்கியுள்ளார். இந்த இரு தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு இணைந்து கடந்த 15 ஆண்டுகளாக சிபுலால் மற்றும் அவரது மனைவி குமாரி ஆகியோர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் ஒருவரான சிபுலால் சமீபத் தில்தான் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். இந்நிறுவனத்தில் இவருக்கு 0.43 சதவீத பங்குகளும், இவரது மனைவிக்கு 0.49 சதவீத பங்குகளும் உள்ளன. தவிர இவர்களது புதல்விகள் ஸ்ருதி மற்றும் ஷ்ரேயா ஆகியோருக்கு தலா 0.64 சதவீத பங்குகள் உள்ளன. இன்ஃபோசிஸ் நிறுவனர் என்.ஆர். நாராயணமூர்த்தி, எஸ். கோபாலாகிருஷ்ணன், நந்தன் நிலகேணி ஆகியோரும் இது போன்ற சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.