படம்: மெட்டா ஏஐ 
வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 உயர்ந்தது

செய்திப்பிரிவு

சென்னை: வாரத்தின் முதல் நாளான இன்று (மே.5) தங்கம் விலை சற்றே ஏற்றம் கண்டது.

சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஏப்.12-ம் தேதி பவுன் ரூ.70,160 ஆகவும், ஏப்.22-ம் தேதி ரூ.74,320 ஆகவும் என அடுத்தடுத்து வரலாறு காணாத அளவில் விலை உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது.

இருப்பினும், கடந்த 23-ம் தேதி பவுனுக்கு ரூ.2,200 வரை குறைந்து, ரூ.72,120 ஆக இருந்தது. அதன்பின்னர் படிப்படியாக குறைந்தது. இருப்பினும் சர்வதேச சந்தையில் தங்கம் பெரிய மாற்றுப் பொருளாக திகழ்கிறது. இதனால், அடுத்த ஆண்டு பவுன் ரூ.80 ஆயிரத்தை தொட்டு விடும் என நகை வியாபாரிகள் கணிக்கின்றனர்.

இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,775-க்கும், பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு பவுன் ரூ.70,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.108-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

SCROLL FOR NEXT