வணிகம்

தங்கம் விலை சரிவு: பவுனுக்கு ரூ.2,200 என குறைந்தது

வேட்டையன்

சென்னை: தங்கம் விலை இன்று (ஏப்.23) பவுனுக்கு ரூ.2,200 என குறைந்து ஒரு பவுன் ரூ.72,120-க்கு விற்பனை ஆகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.275 குறைந்து ஒரு கிராம் ரூ.9,015-க்கு விற்பனை.

உலக அளவில் தங்கத்துக்கு டிமாண்ட் அதிகம் உள்ளது. அதன் காரணமாக சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப அதன் விலை ஏற்ற இறக்குத்துடன் இருப்பது வழக்கம். இருப்பினும் இந்தியாவில் அண்மையில் வரலாறு காணாத வகையில் புதிய விலை உச்சத்தை எட்டி இருந்தது தங்கம் விலை. இந்த நிலையில் இன்று (ஏப்.23) தங்கம் விலை குறைந்துள்ளது.

இன்று (ஏப்.23) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.2,200 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.275 என விலை சரிந்துள்ளது. தற்போது ஒரு பவுன் தங்கம் ரூ.72,120 மற்றும் ஒரு கிராம் தங்கம் ரூ.9,015-க்கும் விற்பனை ஆகிறது. நேற்று (ஏப்.22) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் மீதான விலை பவுனுக்கு ரூ.2,200 என உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

வரும் 30-ம் தேதி அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க விரும்பும் மக்கள் தங்கத்தின் விலை மேலும் குறைய வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். உலக அளவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததும் அண்மைய விலை ஏற்றத்துக்கு காரணம் என பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT