வணிகம்

27 சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் அனுமதி ரத்து: சேலம் செயில் திட்டமும் ரத்து

செய்திப்பிரிவு

27 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான (எஸ்.இ.இசட்) அனுமதியை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது. இதில் சேலம் செயில் சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் எம்மார் எம்.ஜி.எப் திட்டமும் அடங்கும்.

வர்த்தகத் துறைச் செயலாளர் ராஜிவ் கெர் தலைமையிலான அமைச்சரகங்களுக்கு இடையேயான இயக்குநர் குழு இந்த முடிவை எடுத்தது. இதற்கான கூட்டம் கடந்த ஜூலை 24ம் தேதி நடந்தது. இந்த கூட்டம் நடந்த பிறகே இந்த திட்டங்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்த 27 திட்டங்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை அதனால் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது, இதனால் டெக்கான் இன்பிராஸ்ட்ரக்ச்சர் நிறுவனம் அனுமதியை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் 15 திட்டங்களுக்கு அனுமதியை ரத்து செய்யவில்லை. மேலும் 18 சிறப்பு பொருளா தார மண்டலங்களுக்கு கூடுதல் அவகாசம் தர முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. சம்பந்

தப்பட்ட நிறுவனங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அனுமதி கொடுத்து ஐந்து வருடங்கள் முடிந்த திட்டங்களுக்கு ஒரு வருட நீட்டிப்பும், அனுமதி கொடுத்து 6 வருடங்களுக்கு மேலான திட்டங்களுக்கு 6 மாத நீட்டிப்பும் வழங்கப்பட்டிருக்கிறது.

மஹாராஷ்ட்ராவில் இருக்கும் டிஎல்எப் இன்போ பார்க் (பூனே), நவி மும்மை எஸ்.இ.இசட், இந்தியாபுல்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்பிரா எஸ்.இ.இசட்(மஹாராஷ்ட்ரா), கல்ப் ஆயில் கார்ப்பரேஷன் எஸ்.இ.இசட் (கர்நாடகா) ஆகிய திட்டங்களுக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

சிறப்பு பொருளாதார மண்ட லங்கள் பெரும்பாலும் ஏற்றுமதி மண்டலங்களாக இருக்கின்றன. அவை குறிப்பிடத்தகுந்த வரிச் சலுகைகளும் பெறுகின்றன. இந்தியாவில் 566 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதில் 185 திட்டங்கள் மட்டுமே செயல்பாட்டில் இருக்கின்றன.

2005-06ம் நிதி ஆண்டில் ரூ.22,840 கோடி அளவுக்கு இந்த மண்டலங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டன. கடந்த 2013-14ம் நிதி ஆண்டில் 4.94 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி நடந்தது.

SCROLL FOR NEXT