கடலைப் பருப்பு இறக்குமதிக்கு 10 சதவீத வவரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கடந்தாண்டு மே மாதத்தில் உள்நாட்டு சந்தையில் இருப்பை அதிகரிக்கவும், விலையை கட்டுப்படுத்தவும் கடலைப் பருப்பு இறக்குமதிக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டது. அந்த உத்தரவு நடப்பாண்டு மார்ச் 31-ம் தேதி வரை அமலில் உள்ளது.
இந்தநிலையில், வரும் ஏப்ரல் 1 முதல் வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும் கடலைப் பருப்புக்கு 10 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் மார்ச் 27-ல் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி. இந்தியாவில் 2024-25-ல் 1.15 கோடி டன் கடலை உற்பத்தி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டின் உற்பத்தியான 1.1 கோடி டன்னைவிட 5 லட்சம் டன் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.