வணிகம்

சென்னையில் மார்ச் 30-ல் பெண் தொழில் முனைவோருக்கான தேசிய மகளிர் உச்சி மாநாடு!

செய்திப்பிரிவு

சென்னை: 'இந்து தமிழ் திசை'-ட்ரீமி ஈவென்ட்ஸ் இணைந்து நடத்தும் தேசிய மகளிர் உச்சி மாநாடு 2025 மார்ச் 30ம் தேதி நடைபெறவுள்ளது. தடைகளைத் தாண்டி முன்னேற விரும்பும் பெண் தொழில் முனைவோர், தங்களின் தொழில் முயற்சிகளில் சிறந்து விளங்கத் தேவையான உத்திகள், நுண்ணறிவு மற்றும் தொடர்புகளை வழங்கும் நோக்கத்துடன் இந்த உச்சி மாநாடு நடத்தப்படுகிறது.

இந்த உச்சி மாநாடு வெறும் கற்றல் பற்றியது மட்டுமல்ல; செயல் பற்றியது. மதிப்பு மிக்க நுண்ணறிவுகளைப் பெறவும். நடைமுறை உத்திகளை அறியவும், வணிக இலக்குகளை அடைவதற்கு வழி நடத்தி ஊக்கமளிக்கும் தலைவர்களுடன் இணையவும் இது பயன்படும். தொழில் தொடங்கவும், வணிகத்தை விரி வாக்கம் செய்யவும் இந்த நிகழ்வில் தேவையான ஆலோசனைகளைப் பெற முடியும்.

'யாவரும்' அறக்கட்டளை. அறக்கட்டளை பெண்யின் நிறுவனரும், கல்வி, பெண் களுக்கு அதிகாரமளித்தல், சமூக நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் முக்கிய சமூக ஆர் வலருமான ஜனனி மகேஷ் தலைமை விருந்தினராகப் பங்கேற்கிறார். இவர் தமிழகத்தில் பலரது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

புகழ்பெற்ற தொழில்முனை வோரும், ரோச்குக்வேர் மற்றும் ஜாக்ஸ் கிச்சன் நிறுவனத்தின் இணை நிறுவனருமான ஜூபைதா அப்துல் கரீம், 'வணிக சவால் களை சமாளித்தல்: பொதுவான வணிக தடைகளை எவ்வாறு கடந்து செல்வது மற்றும் வெல் வது என்பது குறித்து விளக்கம் அளிக்கவுள்ளார்.

நுண்ணறிவுகளுடன் ஊடகங் கள் உங்கள் பிராண்டையும் வணி கத்தையும் எவ்வாறு வளர்ச்சி பெறச் செய்ய முடியும் என்பது குறித்து 'இந்து தமிழ் திசை' உதவி செய்தி ஆசிரிய ஆசிரியர் பிருந்தா ஸ்ரீனிவாசன் விளக்க உள்ளார். மேலும் தொழில் துறை நிபுணர் களுடனான குழு விவாத நிகழ்ச்சி யில் பங்குச்சந்தை, கடன் மற்றும் நிதி பெறும் உத்திகள் குறித்து புரிந்துகொள்ளலாம்.

காப்புரிமை வழக்கறிஞர் களான அறிவழகன் அருள், ஷெல்லி ஆனந்தவல்லி எழிலரசு ஆகியோர் வர்த்தக முத்திரைகள், காப்புரிமை போன்றவை மூலம் வணிக யோசனைகளை பாதுகாப் பது குறித்து வழிகாட்டுவார்கள். வெப் டி பள்ளி நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஹர்ஷ் வர்தன் சமூக ஊடக உத்திகள் மற்றும் அத்தியாவசிய டிஜிட்டல் மார்க்கெட்டிங் நுட்பங்களைக் கற்றுக்கொடுக்கவுள்ளார்.

பெண் தொழில்முனைவோர், வழிகாட்டுதலைத் தேடும் வணிக உரிமையாளர்கள், சந்தைப்படுத் துதல், பிராண்டிங் மற்றும் நிதித் திறன்களை மேம்படுத்த விரும்பு பவர்கள் இதில் பங்கேற்கலாம். இந்த உச்சி மாநாடு வரும் 30-ம் தேதி சென்னை கிண்டி, சின்ன மலையில் உள்ள ரமதா பிளாசா வில் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. மேலும் விவரங்களைப் பெறவும் முன்பதிவுக்கும் 95003 53530 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

SCROLL FOR NEXT