வணிகம்

இந்திய சந்தையில் நுழைந்தது ரிலையன்ஸ் ஜியோ டிஜிட்டல் காயின்

செய்திப்பிரிவு

தொழிலதிபர் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஜியோ டிஜிட்டல் காயினை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் நுழைந்துள்ள இந்த காயின், வணிக சமூகத்தினர் கிரிப்டோகரன்சி ஆர்வலர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெப் 3 மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு கொண்டுவர, ரிலையன்ஸ் குழுமத்தின் தொழில்நுட்பப் பிரிவான ஜியோ பிளாட்பார்ம்ஸ் பாலிகன் லேப்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. ஜியோ காயின்கள் பிளாக்செயின் அடிப்படையிலான வெகுமதி டோக்கன்கள் ஆகும். பயனாளர்கள் இந்திய செல்போன் எண்ணைப் பயன்படுத்தி, வெவ்வெறு செல்போன் அல்லது இணையதள செயலி மூலம் ஜியோ காயினை வாங்கி பயனடையலாம்.

மார்ச் 7-ம் தேதி நிலவரப்படி, 1 ஜியோ காயின் டோக்கன் மதிப்பு ரூ.22.347053 ஆக இருந்தது. இந்த டிஜிட்டல் நாணயத்தின் சந்தை மதிப்பு ரூ.3,92,53,882 ஆக இருந்தது. மொத்தம் 19,08,130 டோக்கன்கள் புழக்கத்தில் உள்ளன.

கணினி, செல்போன், லேப்டாப்களில் ஜியோஸ்பியர் வெப் பிரவுசரை பயன்படுத்தியோ, ஜியோ மார்ட், ஜியோ சினிமா, மை ஜியோ உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தியோ ஜியோ காயினை வாங்கலாம். இதை, செல்போன் ரிசார்ஜ் செய்யவும் தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்கவும் பயன்படுத்த முடியும்.

SCROLL FOR NEXT