வணிகம்

நீண்ட சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 740 புள்ளிகள் அதிகரிப்பு

செய்திப்பிரிவு

சாதகமாற்ற சர்வதேச நிலவரங்களால் பங்குச் சந்தையில் நீடித்து வந்த சரிவுக்கு நேற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. சென்செக்ஸ் 740 புள்ளிகள் அதிகரித்து 73,730 ஆகவும், நிப்டி 254 புள்ளிகள் உயர்ந்து 22,337-ஆகவும் நிலைத்தன.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் வர்த்தக கொள்கை சர்வதேச வணிகத்தில் நிச்சயமற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையிலும் ஆசிய சந்தையில் காணப்பட்ட விறுவிறுப்பு இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.

அதன் காரணமாக, நிப்டி 50-யில் மஹிந்திரா, பவர் கிரிட், எஸ்பிஐ, ஐசிஐசிஐ, அதானி எண்டர் பிரைசஸ் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. நிப்டி ஐடி 1.6%, ஆட்டோ 1.1%, வங்கி குறியீட்டெண் 0.3% ஏற்றம் பெற்றன.

1996-ம் ஆண்டு ஏப்ரலில் இருந்து நிப்டி 50 மீக நீண்ட சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக, 2024 செப்டம்பரில் உச்சபட்சமாக 26,277 புள்ளிகளில் இருந்த நிப்டி குறியீடு தற்போது 16 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும், 2008-09 உலகளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியுடன் ஒப்பிடும்போது தற்போது 6-வது முறையாகவும், கோவிட் காலமான 2020 மார்ச்சுடன் ஒப்பிடும்போது 2-வது முறையாகவும் பங்குச் சந்தைகள் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளன.

நடப்பாண்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 14 பில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீட்டை பங்குகளில் இருந்து விலக்கிக் கொண்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT