வணிகம்

அதிகாலை 2 மணி வரை பணிபுரிகிறார் முகேஷ்: மகன் ஆகாஷ் அம்பானி பெருமிதம்

செய்திப்பிரிவு

மும்பை: உறுதியுடன் பணியாற்றுவதில் தொழிலதிபர் முகேஷ் அம்பேனி, நிகரற்றவர் எனவும், அவர் அதிகாலை 2 மணி வரை இ-மெயில்களை பார்த்து பதில் அனுப்புவார் என அவரது மகன் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்ற ‘மும்பை டெக் வீக்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவன தலைவர் ஆகாஷ் அம்பானி, தனது குடும்பத்தினர் பற்றி கூறியதாவது:

எனக்கு மிகப் பெரிய ஊக்கமே, எங்களின் குடும்பத்திலிருந்துதான் கிடைக்கிறது. ஒரே வீட்டில் நாங்கள் 32 ஆண்டுகளாக ஒன்றாக வசிக்கிறோம். எனக்கான ஊக்குவிப்பு எனது பெற்றோரிடம் இருந்துதான் கிடைக்கிறது. எனது தந்தை முகேஷ் அம்பானி அர்ப்பணிப்புடன் பணியாற்றுவார். அவர் ரிலையன்ஸ் நிறுவனங்களை 40 ஆண்டுகளுக்கு மேல் கவனித்தாலும், தற்போதுவரை அதிகாலை 2 மணி வரை அவருக்கு வரும் இ-மெயில்களை சரிபார்த்து பதில் அனுப்புவார். அவரிடம் இருந்துதான், எங்களுக்கு உண்மையிலேயே ஊக்குவிப்பு கிடைக்கிறது.

எனக்கும், எனது தாய் நீட்டா அம்பானிக்கும் கிரிக்கெட்டில் ஆர்வம் அதிகம். நாங்கள் ஒன்றாகத்தான் டி.வி.யில் கிரிக்கெட் பார்ப்போம். அவர் கவனிக்கும் சின்ன சின்ன விஷயங்களில் கூட நாம் ஊக்குவிப்பை பெற முடியும். எல்லாத்தையும்விட அர்ப்பணிப்புதான் மிகப் பெரிய ஊக்குவிப்பு. வித்தியாசத்தை ஏற்படுத்தும் சின்ன சின்ன விஷயங்கள்தான் மிகப் பெரிய ஊக்குவிப்பு.

நான் 12 மணி நேரத்துக்கு மேலாக பணியாற்றுகிறேன். இதற்கு ஆதரவாக இருக்கம் எனது மனைவி ஸ்லோகா மேத்தாவுக்கு நன்றி. இவ்வாறு ஆகாஷ் அம்பானி கூறினார்.

SCROLL FOR NEXT