வணிகம்

பட்ஜெட் 2025: 1.5 லட்சம் ஊரக அஞ்சல் நிலையங்கள் மேம்பாடு

செய்திப்பிரிவு

நாடு முழுவதும் 1.5 லட்சம் ஊரக அஞ்சல் நிலையங்கள் மேம்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நேற்று தாக்கலான பட்ஜெட் உரையில் அவர் கூறியதாவது: இந்தியா போஸ்ட் என்ற பெயரில் நாடு முழுவதும் தபால் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதை மிகப்பெரிய பொது அமைப்பாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதற்காக ஊரகப் பகுதிகளில் செயல்படும் 1.5 லட்சம் ஊரக அஞ்சல் நிலையங்கள் மேம்படுத்தப்படும். அங்கு உள்கட்டமைப்பு வசதிகள் நவீனப்படுத்தப்படும். இதன்மூலம் ஊரக பொருளாதாரம் மேம்படுத்தப்படும். 12.7 லட்சம் டன் திறன் கொண்ட யூரியா உற்பத்தி தொழிற்சாலை அசாமில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT