உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்காக மாநில அரசுகளுக்கு 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடனாக ரூ.1.5 லட்சம் கோடி வழங்கப்படும். கடந்த 2021-ம் ஆண்டுஅறிவிக்கப்பட்ட பயன்படுத்தப்படாத அரசு சொத்துகளை பணமாக்கும் திட்டம் வெற்றி பெற்றது.
இதையடுத்து, 2-ம் கட்டமாக 2025-30 காலகட்டத்தில் ரூ.10 லட்சம் கோடி திரட்டுவதற்கான திட்டம் விரைவில் அறிவிக்கப்படும். இந்த திட்டத்துக்கு ஆதரவாக ஒழுங்குமுறை மற்றும் நிதி நடவடிக்கைகள் நன்றாக வடிவமைக்கப்படும்.ஒவ்வொரு அமைச்சகமும் உள்கட்டமைப்பு தொடர்பான 3 ஆண்டு திட்டங்களைக் கொண்டு வரும். அவை அரசு, தனியார் கூட்டு (பிபிபி) முறையில் செயல்படுத்தப்படும்.
மாநிலங்களும் அவ்வாறு செய்ய ஊக்குவிக்கப்படும். மேலும் பிபிபி முன்மொழிவுகளைத் தயாரிக்க ஐஐபிடிஎஃப் (இந்திய உள்கட்டமைப்பு திட்ட மேம்பாட்டு நிதி) திட்டத்தின் ஆதரவைப் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.