வணிகம்

தங்கம் பவுனுக்கு ரூ.120 உயர்வு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 உயர்ந்து, ரூ.60,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 உயர்ந்து, ரூ.60,880-க்கு விற்பனையானது.

அதேபோல், 24 காரட் சுத்த தங்கம் ஒரு பவுன் ரூ.66,408-க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.106 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2 ஆயிரம் உயர்ந்து ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாயாகவும் இருந்தது.

SCROLL FOR NEXT