புதுடெல்லி: ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. ரிலையன்ஸ் நிறுவனத்தின் பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் ஆனந்த் அம்பானிக்கு, கடந்த ஆண்டு தொழிலதிபர் விரேன் மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டை திருமணம் செய்துகொண்டார். பெரும் செலவில் நடைபெற்ற இந்தத் திருமணம் உலக மக்களை வியப்பில் ஆழ்த்தியது.
இந்நிலையில் ஆனந்த் அம்பானி தனது கைகளில் ரூ.22.5 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த கடிகாரத்தை அணிந்துள்ளார். இந்த செய்தி தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. நீல நிறத்தில் கண்ணைப் பறிக்கும் வகையில் இந்த விலை உயர்ந்த கடிகாரத்தை ஆனந்த் அம்பானி அணிந்திருக்கும் புகைப்படம் இணையதளத்தில் பரவி வருகிறது.
அவர் ரிச்சர்ட் மில் ஆர்எம் 52-04 ஸ்கல் புளூ சபையர் ரக கடிகாரத்தை அணிந்துள்ளார். இது ஒரு அபூர்வமான கடிகாரம். உலகிலேயே இதுபோன்ற கடிகாரங்கள் 3 மட்டுமே உள்ளன.
ஆனந்த அம்பானி ஏற்கெனவே பல்வேறு உயர் ரக கடிகாரங்களை தனது கலக்சனாக வைத்துள்ளார். ரிச்சர்ட் மில், படேக் பிலிப், ஆட்மார்ஸ் பிஜியோ உள்ளிட்ட நிறுவனங்களின் விலையுயர்ந்த கடிகாரங்கள் அவரிடம் உள்ளன.
இந்நிலையில், அண்மையில் ஆனந்த் அம்பானி தனது மனைவி ராதிகாவுடன் ஒரு நிகழ்ச்சிக்கு வந்தபோது ரிச்சர்ட் மில் ஆர்எம் 52-04 ஸ்கல் புளூ சபையர் ரக கடிகாரத்தை அணிந்திருந்தார். அரிதான, விலை உயர்ந்த கடிகாரங்களை சேமித்து வைப்பவர்களுக்கு மட்டுமே இந்த அபூர்வ வகை கடிகாரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரிச்சர்ட் மில் நிறுவனம் இந்த கடிகாரத்தைத் தயாரித்துள்ளது.