ஜப்பானை சேர்ந்த புரோக்கரேஜ் நிறுவனமான நொமுரா சென்செக்ஸுக்கான இலக்கை உயர்த்தி உள்ளது. அதன்படி 2015 ஆகஸ்டில் சென்செக்ஸ் 30310 புள்ளியை தொடும் என்று இந்த நிறுவனம் கணித்திருக்கிறது. தற்போதைய நிலைமையில் இருந்து சுமார் 17% வரை உயரும் என்று நொமுரா கணித்திருக்கிறது.
சுழற்சி அடிப்படையிலான வளர்ச்சியை சந்தை கண்டு கொள்ளவில்லை. இதுவரை புது அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பொறுத்தே செயல்பட்டு வந்திருக்கிறது என்று நொமுரா தெரிவித்திருக்கிறது. டிசம்பர் மாத இறுதியில் 27,000 என்ற புள்ளியை தொடும் என்று ஏற்கெனவே நொமுரா கணித்திருந்தது. இப்போது இலக்கை உயர்த்தி இருக்கிறது.
ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கெயில் இந்தியா, டாடா மோட்டார்ஸ் ஆகிய பங்குகளையும் நொமுரா பரிந்துரை செய்திருக்கிறது. இதை தவிர யூபிஎஸ் நிறுவனம் தேதிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டிக்கு 12 மாத இலக்காக 8000 புள்ளியை இலக்காக நிர்ணயித்திருக்கிறது.