கோப்புப்படம் 
வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 உயர்வு!

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.29) பவுனுக்கு ரூ.560 என உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் தற்போது உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,160-க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.57,280-க்கும் விற்பனை. வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.98-க்கு விற்பனையாகிறது.

உலக அளவில் தங்கம் அதிகம் வாங்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழலை பொறுத்து இந்தியாவின் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையின் போது உச்சத்தை தொட்டிருந்த தங்கம் விலை இந்த வாரத்தின் தொடக்கத்தில் பவுனுக்கு ரூ.1,760 வரை குறைந்தது. இந்த சூழலில் இன்று பவுனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது.

SCROLL FOR NEXT