வணிகம்

தங்கம் விலை ரூ.80 அதிகரித்து பவுன் ரூ.58,920-க்கு விற்பனை

செ.ஆனந்த விநாயகம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.6) மீண்டும் அதிகரித்து, ஒரு பவுன் ரூ.58,920-க்கு விற்பனையாகிறது

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக ஆபரணத் தங்கத்தின் விலை, நாள்தோறும் புதிய உச்சத்தை அடைந்து வந்தது. இந்நிலையில் தீபாவளி முடிந்து நேற்று தங்கத்தின் விலை சற்று குறைந்தது. இன்று மீண்டும் தங்கம் விலை அதிகரித்துள்ளது.

அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு பவுன் தங்கம் ரூ.58,920-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.10 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7,365-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.105-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.

SCROLL FOR NEXT