வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்தது

செய்திப்பிரிவு

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.59,080-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்து வந்தது.

இந்நிலையில், நேற்று விலை குறைந்தது. இதன்படி, கிராம் ஒன்றுக்கு ரூ.70 குறைந்து ரூ.7,385-க்கும், பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.59,080-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் ரூ.63,120-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.106-க்கு நேற்று விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,06,000 ஆக உள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தங்கம் விலை கடந்த 8 நாட்களில் பவுனுக்கு ரூ.1,400 வரை உயர்ந்தது. இந்நிலையில், தங்கம் விலை சற்று குறைந்திருப்பது நகை வாங்குபவர்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT