வணிகம்

வங்கி சாரா நிதி நிறுவனமான எல் அண்ட் டி பைனான்ஸ் லாபம் ரூ.696 கோடியாக உயர்வு

செய்திப்பிரிவு

சென்னை: வங்கி சாரா நிதி நிறுவனமான எல் அண்ட் டி பைனான்ஸ் நடப்பு நிதி ஆண்டில் செப்டம்பருடன் முடிவடைந்த 2-வது காலாண்டில் வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.696 கோடியை ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதியாண்டில் ஈட்டிய லாபத்துடன் ஒப்பிடுகையில் 17 சதவீதம் அதிகமாகும்.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டைக் காட்டிலும் 2-வது காலண்டில் நிறுவனம் வழங்கிய மொத்த சுடன் 18 சதவீதம் உயர்ந்துள்ளது. சில்லறைக் கடனைப் பொருத்தவரையில் 12 சதவீதம் அதிகரித்து ரூ.15,902 கோடியாக இருந்தது.

விவசாய கடன் 5.1,534 கோடியிலிருந்து 16 சதவீதம் உயர்ந்து ரூ.1,782 கோடியானது. மோட்டார் சைக்கிள் கடன் 32 சதவீதம் உயர்ந்து ரூ.1,817 கோடி யிலிருந்து ரூ.2,393 கோடியாக வும், தனி நபர் கடன் 4 சதவீதம் அதிகரித்து ரூ.1,306 கோடியிலி ருந்து ரூ.1,361 கோடியாகவும் ஆனது.

வீடு மற்றும் சொத்துக்கு எதிரான கடன் பிரிவில் நிறுவனம் வழங்கிய கடன் ரூ.1,734 கோடி யிலிருந்து 46 சதவீதம் அதிக + ரித்து ரூ.2,531 கோடியை எட்டி யுள்ளது என எல் அண்ட் டி பைனான்ஸ் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT