வணிகம்

செபி தலைவர் ஆஜராகாததால் பிஏசி கூட்டம் ஒத்திவைப்பு

செய்திப்பிரிவு

செபி தலைவர் மாதபி புரி புச் ஆஜராகாததால் நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு (பிஏசி) கூட்டம் நேற்று ஒத்திவைக்கப்பட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் தற்போது செபி தலைவராக இருக்கும் மாதபி புரி புச் முறைகேடாக முதலீடு செய்து ஆதாயம் பெற்றதாக குற்றம்சாட்டியிருந்தது. மேலும், இவர் அதானி குழும நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் புகார் தெரிவித்திருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக பிஏசி முன்பு அக்டோபர் 24-ம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், இதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற மாதபி புச் கோரிக்கையை ஏற்க பிஏசி நிராகரித்துவிட்டது. இதைத் தொடர்ந்து அவர் நேற்று விசாரணைக்கு ஆஜராவார் என்று தகவல் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் தனிப்பட்டட காரணங்களால் டெல்லி வரமுடியவில்லை என செபி தலைவர் கூறியதையடுத்து பிஏசி கூட்டம் நேற்று ஒத்தி வைக்கப்பட்டது.

இதுகுறி்த்து கே.சி.வேணுகோபால் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில்" வியாழன் காலை 9.30 மணிக்கு செபி தலைவர் மற்றும் இதர அதிகாரிகளிடமிருந்து தகவல் கிடைத்தது. மாதபி புச் தனிப்பட்ட காரணங்களுக்கா தன்னால் டெல்லி வரமுடியவில்லை என்று கூறியிருந்தார். இதையடுத்து, பிஏசி கூட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது" என்றார்.

SCROLL FOR NEXT