சென்னை: தங்கம் விலை பவுன் ரூ.59,000-ஐ நெருங்குகிறது. சென்னையில் இன்று (அக்.23) பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.58,720-க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த ஜுலை மாதம் மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைத்தது. இதன் காரணமாக, அன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது.
தொடர்ந்து தங்கம் விலை குறையும் என எதிர்பார்த்த நிலையில் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், இன்று (அக்.23) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,340-க்கு விற்பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.320 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.58,720-க்கு விற்பனை ஆகிறது.