வணிகம்

அக்டோபரில் இந்திய பங்கு சந்தைகளில் ரூ.58,711 கோடி பங்குகளை விற்ற அந்நிய முதலீட்டாளர்

செய்திப்பிரிவு

மும்பை: அக்டோபரில் இதுவரை இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து நிகர அளவில் ரூ.58,711 கோடி மதிப்பிலான பங்குகளை அந்நிய முதலீட்டாளர்கள் விற்றுள்ளனர்.

இஸ்ரேல்-ஈரான் இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கு சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது, இந்தியா மட்டுமின்றி உலக சந்தைகளிலும் எதிரொலித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அந்நிய முதலீட்டாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய பங்குகளி லிருந்து அதிக அளவில் முத லீட்டை விலக்கி வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் மாதத்தில், அந்நிய முதலீட்டாளர்கள் கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவில் ரூ.57,224 கோடியை பங்குகளில் முதலீடு செய்திருந்தனர். இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, சீன சந்தைகள் வலுவுடன் காணப்பட்டது போன்ற காரணங்களால் அவர்கள் அக்டோபரில் இதுவரை இந்திய பங்குகளிலிருந்து ரூ.58,500 கோடிக்கும் அதிகமான தொகையை திரும்பப் பெற்றுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ரூ.34,252 கோடியை திரும்பப் பெற்ற பிறகு ஜூன் முதல் அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ச்சியாக பங்குகளில் முதலீட்டை அதிகரித்து வந்தனர். இந்த நிலையில், அக்டோபர் மாதத்தில் கணிசமான தொகையை அவர்கள் திரும்ப பெற்றுள்ளனர். இந்த ஆண்டில், ஜனவரி, ஏப்ரல், மே தவிர்த்து அனைத்து மாதங்களிலும் இந்திய பங்கு களை அவர்கள் போட்டி போட்டு வாங்கியது தெரியவந்துள்ளது.

SCROLL FOR NEXT