புதுடெல்லி: பிரதமரின் தொழில் பயிற்சி திட்டத்தை மத்திய அரசு கடந்த 3-ம் தேதி தொடங்கியது. இதில் அதானி குழுமம், மகிந்திரா குழுமம், மாருதி சுசுகி, பெப்சி, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, இந்துஸ்தான் யுனிலீவர், சாம்சங், எச்.பி. உட்பட 500 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
விற்பனை, சந்தைப்படுத்துதல், தொழில்முனைவு உட்பட பல பிரிவுகளில் இந்நிறுவனங்களில் தொழில் பயிற்சி அளிக்கப்பட வுள்ளது. முழுநேர தொழிலில் ஈடுபடாத21 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் குறைந்தது 10-ம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்தை தாண்டக் கூடாது. முதுநிலைபட்டதாரிகள் இந்த தொழில் பயிற்சி திட்டத்தில் சேரமுடியாது.
இவர்களுக்கு மாதம் ரூ.5,000 வீதம் ஓர் ஆண்டுக்கு உதவித் தொகை அளிக்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் www.pminternship.mca.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அந்தப் பட்டி யலில் இருந்து தங்களுக்கு தேவை யான நபர்களை நிறுவனங்கள் தேர்வு செய்யும். தற்போது இத்திட் டத்தின் கீழ் 2,200 தொழிற்பயிற்சி வாய்ப்புகள் இந்த இணையத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. மகிந்திரா குழுமம், 2,100 பேரை தேர்வு செய்யவுள்ளது.