வணிகம்

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ கோயல்

செய்திப்பிரிவு

குருகிராம்: சோமாட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான (சிஇஓ) தீபிந்திர் கோயல் தனது மனைவியுடன் உணவு டெலிவரியில் ஈடுபட்டார்.

சோமாட்டோ நிறுவனத்தின் டீசர்ட்டை அணிந்தபடி, குருகிராமில் சிஇஓ தீபிந்திர் கோயலும் அவரது மனைவி ஜியா கோயலும் பைக்கில் சென்று வாடிக்கையாளர்களுக்கு உணவை டெலிவரி செய்தனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இது குறித்து தீபிந்திர் கோயல் தன் சமூக வலைதளப் பக்கத்தில் “சில நாட்களுக்கு முன் நாங்கள் இருவரும் இணைந்து உணவு டெலிவரியில் ஈடுபட்டோம்” என்று தன் மனைவியை டேக் செய்து, அவர்கள் டெலிவரி செய்த படங்களைப் பதிவிட்டுள்ளார்.

அவர்கள் இருவரும் உணவுகளை பையில் எடுத்துக்கொண்டு பைக்கில் பயணம்செய்வது, வாடிக்கையாளர்களின் முகவரியை மொபைல் மூலம் உறுதி செய்வது, வாடிக்கையாளர்களுடன் உரையாடுவது போன்ற புகைப்படங்களை அவர் பதிவிட்டுள்ளார்.

விளம்பர உத்தி: “பெரிய நிறுவனத்தின் சிஇஓ இவ்வாறு செயல்படுவது ஆச்சர்யம் தருகிறது. அவரது பணிவு போற்றத்தக்கது” என்று ஒரு பதிவர் கருத்து தெரிவித்துள்ளார். மற்றொரு பதிவர், “இது ஒரு விளம்பர உத்தி. சோமாட்டா டெலிவரி நபர்கள் தினமும் அவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அவர்களின் பிரச்சினைக்கு செவிகொடுங்கள்” என்று விமர்சித்துள்ளார்.

SCROLL FOR NEXT