கோவை: மின் கட்டணம், பேப்பர் விலை அதிகரித்துள்ளதால் அட்டைப் பெட்டிகளின் விலை 15 சதவீதம்உயர்த்தப்பட்டுள்ளதாக, தென்னிந்திய அட்டைப் பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தென்னிந்திய அட்டைப் பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கோவை மண்டல 29-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. சங்கத் தலைவர் சிவக்குமார் வரவேற்றார். செயலாளர் சுரேஷ்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் வெள்ளைக்கண்ணு வரவு, செலவு கணக்குகளை சமர்ப்பித்தார்.
எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் பேப்பர் உற்பத்திஆலைகள் 3 முறை விலையை உயர்த்திஉள்ளன. மேலும், மின் கட்டணம்அபரிமிதமாக உயர்ந்துள்ளது. தொழிலாளர்கள் பற்றாக்குறையும் நிலவுவதால், அட்டைப் பெட்டிதயாரிப்புத் தொழில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. எனவே, அட்டைப் பெட்டிகளின் விலை 15 சதவீதம் உயர்த்தப்படுகிறது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.