புதுடெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியம் (இபிஎப்ஓ) நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உற்பத்தி, சந்தைப்படுத்துதல், சேவைகள், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில் துறையைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் இபிஎப்ஓ-வில் இணைந்துள்ளனர். புதிதாகசேர்க்கப்பட்டவர்களில் 10.52 லட்சம் பேர்முதன் முறையாக பணியில் சேர்ந்துள்ளவர்கள். இது, இந்தியாவின் வேலைவாய்ப்புசந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைஎடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
மேலும், வேலைவாய்ப்பு உரு வாக்குதல், வேலைவாய்ப்பு சந்தையை முறைப்படுத்துவதை நோக்கமாக கொண்ட மோடி அரசின் திட்டங்களின் செயல் திறனை இது பிரதிபலிக்கிறது. கடந்த ஜூலையில் இணைந்த முதல் முறை பணியாளர்களின் எண்ணிக்கையானது முந்தைய ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது 2.6 சதவீதம் அதிகமாகும். அதே நேரம், கடந்தாண்டு ஜூலையுடன் ஒப்பிடும்போது இது 2.43% அதிகம். இவ்வாறு இபிஎப்ஓ தெரிவித்துள்ளது.