கோப்புப்படம் 
வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 உயர்வு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.55,080-க்கு விற்பனையாகிறது.

நேற்றைய தினம் பவுனுக்கு ரூ.200 குறைந்திருந்த நிலையில் இன்று தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

அந்த வகையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.480 உயர்ந்து, ரூ.55,080-க்கு விற்பனை. கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,885-க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து, ரூ.97.50-க்கு விற்பனையாகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT