பெப்சிகோ அறக்கட்டளை 4.26 மில்லியன் டாலர்களை நீராதார உதவியாக ஒதுக்கவுள்ளது. தென் மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரம், மற்றும் கேரளம் ஆகியவற்றுக்கான நீராதார உதவியாக இத்தொகையை ஒதுக்குகிறது பெப்சி அறக்கட்டளை.
நோக்கத்துடன் கூடிய செயல்திட்டம் 2025 என்ற திட்டத்தின் கீழ் பெப்சிகோ அறக்கட்டளை 2006-ல் தொடங்கியதான இதன் குறிக்கோள் உலகின் இடர்பாட்டுப் பகுதிகளில் வாழும் 25 மில்லியன் மக்கள்தொகைக்கான பாதுகாப்பான குடிநீர் என்ற திட்டத்தின் கீழ் இது வருகிறது.
இந்த தென் மாநிலங்களுக்கான நீராதார நிதியுதவி அதன் பெரிய திட்டத்தின் ஓர் அங்கமாகும்.
“அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் நீராதார உதவி என்பது சுத்தமான நீரை மக்கள் அடைதல் என்பதற்கான தீர்வாக அமையும். சமூக மற்றும் அரசுத்திறன் சார்ந்து நீராதாரங்களை பாதுகாப்பதாகும். இதில் நீரின் தரநிலையை பரிசோதித்தல், இதற்கான பராமரிப்புப் பயிற்சிகள், மக்களை இது குறித்து விழிப்புணர்வு அடையச் செய்தல் ஆகியவை அடங்கும். இதில் மழைநீரைச் சேகரித்தலும் உள்ளடங்கும்” என்கிறது பெப்சி அறக்கட்டளை.
“மக்கள் திறம்பட நீராதாரத்தை சேமித்து நிர்வகித்து விநியோகம் செய்வதற்கான பெப்சிகோவின் திட்டமாகும் இது, இந்தியாவில் பல இடங்களில் பாதுகாப்பான நீர் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக்காக பணியாற்றி வருகிறோம்” என்று பெப்சி இந்தியா நிறுவனத்தின் சிஇஓ அகமட் எல் ஷெய்க் தெரிவித்தார்.