வணிகம்

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.38 அதிகரிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: வர்த்தக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை ரூ.38 அதிகரித்து ரூ.1,855-க்கு விற்பனை ஆகிறது.

சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல், வர்த்தகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

இந்நிலையில், செப்டம்பர் மாதத்துக்கான வர்த்தகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. இதன்படி, 19 கிலோ எடையுள்ள வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.38 அதிகரித்து அதன் விலை ரூ.1,817-ல் இருந்து உயர்ந்து ரூ.1,855 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம், வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் இன்றி ரூ.818.50-க்கு விற்பனை ஆகிறது.

SCROLL FOR NEXT