மும்பை: பட்ஜெட்டில் மூலதன ஆதாய வரி உயர்த்தப்பட்ட நிலையிலும், பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. முதலீட்டாளர்கள் தொடர்ச்சியாக பங்குகளை வாங்கி குவித்து வருகின்றனர்.
அதன் காரணமாக, நேற்றைய வர்த்தகத்தில் 30 முன்னணி நிறுவனங்களை உள்ளடக்கிய மும்பைபங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,292 புள்ளிகள் அதாவது 1.62 சதவீதம் அதிகரித்து 81,332 புள்ளிகளைத் தொட்டது. தேசிய பங்குச் சந்தைகுறியீட்டெண் நிப்டி 428 புள்ளிகள் அதாவது 1.76 சதவீதம் அதிகரித்து புதிய உச்சமாக 24,834 புள்ளிகளை எட்டியது.
இதன் மூலம், மும்பை பங்குச் சந்தையில் நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.7.16 லட்சம் கோடி அதிகரித்து ரூ.456.98 லட்சம் கோடியைத் தொட்டது.