வணிகம்

கோவையில் ம.பி தொழில் மேம்பாட்டு மையம் திறக்கப்படும்: மத்தியப் பிரதேச முதல்வர் தகவல்

இல.ராஜகோபால்

கோவை: மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவுடன் தொழில்துறையினர் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் பேசும்போது, ''தமிழ்நாட்டை சேர்ந்த தொழில் துறையினர் மத்தியப் பிரதேசத்தில் தொழில் செய்து வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறோம். பிப்ரவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாடு மத்தியப் பிரதேசத்தில் நடக்கிறது இந்நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில் துறையினர் திரளாக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தொழில் நகரான கோவை மாவட்டத்தில் இருந்து மத்தியப் பிரதேசத்தில் தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் செய்ய தேவையான உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்க உதவும் வகையில் மத்தியப் பிரதேச தொழில் மேம்பாட்டு மையத்தின் அலுவலகம் கோவையில் அமைக்கப்படும். இன்று நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து தொழில் துறையினரை ஊக்குவிக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்'' என்றார்.

SCROLL FOR NEXT