வணிகம்

பங்குச் சந்தை சரிவு: முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி இழப்பு

செய்திப்பிரிவு

மும்பை: பங்குச் சந்தை வர்த்தகத்தில் நேற்று கடும் சரிவு காணப்பட்டது. சென்செக்ஸ் 738.81 புள்ளிகள் சரிந்து 80,604 ஆகவும், நிஃப்டி 269.95 புள்ளிகள் சரிந்து 24,530 ஆகவும் குறைந்துள்ளது.

வர்த்தக தொடக்க நேரத்தில் சென்செக்ஸ் 81,587 ஆக உயர்ந்துபுதிய உச்சம் தொட்டது. ஆனால்,வர்த்தக முடிவில் அது 80,604 ஆக சரிந்தது. இதனால், முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடிஇழப்பு ஏற்பட்டது.வரும் 23-ம்தேதி மத்திய பட்ஜெட் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதால் பங்குச் சந்தையில் சரிவு காணப்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

SCROLL FOR NEXT