பெங்களூரு: கர்நாடக அரசு, பெட்ரோல், டீசல்விலையை லிட்டருக்கு முறையேரூ.3 மற்றும் ரூ.3.02 உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து முக்கிய எதிர்க்கட்சியான பாஜக செய்தித்தொடர்பாளர்எஸ்.பிரகாஷ் கூறுகையில்,“நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடனேயே மாநிலத்தில் பெட்ரோல்,டீசல் விலையை கணிசமாகஉயர்த்த சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு முடிவெடுத்துள்ளது கண்டனத்துக்குரியது.ராகுல் காந்தி தங்களது வங்கிகணக்குகளில் ரூ.8,000 போடுவார்என எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கும் நிலையில் மாறாக பெட்ரோல்,டீசல், விலை உயர்வை அவர்கள்மீது சுமத்தி சுமையை அதிகரித்துள் ளது’’ என்றார்.
பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா பேசுகையில், “ நாடாளுமன்றத்தின் தோல்வி மற்றும் மாநிலத்தின் நிதி நிலைமை சீர்குலைந்துள்ளதை ஏற்க முதல்வர் சித்தராமையா தயாராக இல்லை. மாநிலம் நெருக்கடியில் சிக்கியுள்ளதை இந்த எரிபொருள் விலையேற்றம் பிரதிபலிக்கிறது. நிர்வாகத்தை நடத்த முடியாமல் அரசு திணறுகிறது. கர்நாடக அரசு உடனடியாக எரிபொருள் விலையை உயர்த்தும் முடிவை திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் பாஜக மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை (இன்று)முதல் போராட்டங்களை முன்னெடுக்கும்’’ என்றார்.
கர்நாடக அரசின் இந்த முடிவால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.