கோப்புப்படம் 
வணிகம்

பங்குச் சந்தை வதந்திகள் தொடர்பாக நிறுவனங்கள் விளக்கம் தரும் நடைமுறை அமலுக்கு வந்தது

செய்திப்பிரிவு

மும்பை: சந்தை மதிப்பின் அடிப்படையில் முதல் 100 இடங்களில் உள்ள நிறுவனங்கள், அவற்றைப் பற்றி ஊடகங்களில் வெளியாகும் வதந்திகள் குறித்து கட்டாயம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பங்கு சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி உத்தரவிட்டிருந்தது. இந்த விதிமுறை நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

நிறுவனங்கள் குறித்து வெளியாகும் வதந்திகள் அந்நிறுவனங்களின் பங்கு மதிப்பில் தாக்கம் செலுத்துகின்றன. இந்நிலையில், நிறுவனங்களைப் பற்றி ஊடகங்களில் வெளியாகும் வதந்திகளுக்கு அந்நிறுவனங்கள் 24 மணிநேரத்துக்குள் தெளிவு வழங்க வேண்டும். அதாவது, வதந்தியில் உள்ள தகவலை உறுதிப்படுத்த வேண்டும் அல்லது மறுப்பு தெரிவிக்கும் விதிமுறையை செபி கொண்டு வந்தது.

முதற்கட்டமாக சந்தை மதிப்பின் அடிப்படையில் டாப் 100 நிறுவனங் களுக்கு இந்த விதி நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் டாப் 250 நிறுவனங்களும் இந்த விதியை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT