வணிகம்

2023-24 நிதி ஆண்டில் சுந்தரம் பைனான்ஸ் லாபம் ரூ.1,334 கோடி

செய்திப்பிரிவு

சென்னை: சுந்தரம் பைனான்ஸ் 2023-24 நிதி ஆண்டில் ரூ.1,334 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. அதற்கு முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 23 சதவீதம் அதிகம் ஆகும்.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் வங்கிசாரா நிதி நிறுவனமான சுந்தரம் பைனான்ஸ், வாகனங்கள் மற்றும் இயந்திரங்களுக்கான கடன் வழங்கி வருகிறது. 2023-24 நிதி ஆண்டில் இந்நிறுவனத்தின் நிகரலாபம் ரூ.1,334 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல்இந்நிறுவனத்தின் கடன் வழங்கல் 25 சதவீதம் உயர்ந்து ரூ.26,163 கோடியாக உள்ளது.

SCROLL FOR NEXT