நெட்வொர்க்கிங் துறையில் செயல்பட்டுவரும் சிஸ்கோ நிறுவனம் 6000 பணியாளர்களை வேலையை விட்டு நீக்க முடிவு செய்திருக்கிறது. நிகர லாபம குறைந்திருப்பதால் இந்த முடிவினை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. ஒரு வருடத்துக்கு முன்பு 4000 பணியாளர்களை சிஸ்கோ நீக்கியது.
தற்போது சொல்லபட்டிருக்கும் 6000 பணியாளர்கள் என்பது மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையில் 8 சதவீதம் ஆகும். இதில் இந்திய பணியாளர்களுக்கும் வேலை போகலாம் என்று விவரம் தெரிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த நிறுவனம் இந்திய செயல்பாடுகளை குறித்து எந்தவிதமான கருத்துகளையும் தெரிவிக்கவில்லை. இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, புனே மற்றும் ஹைதரா பாத் உள்ளிட்ட நகரங்களில் சுமார் 10,000 பேர் வேலை செய்கிறார்கள்.