சென்னை: சென்னையில் நேற்று தங்கத்தின் விலை ரூ.640 அதிகரித்து பவுன்ரூ.53,720-க்கு விற்பனை செய்யப் பட்டது
சர்வதேச பொருளாதார சூழல்,அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப் படுகிறது.
கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, அக். 4-ம் தேதி பவுன் ரூ.42,280 என்றளவில் விற்பனையானது. இதன் பின்னர் இஸ்ரேல், பாலஸ்தீன போர் எதிரொலியாக அதிகரித்த தங்கம் விலை, தொடர்ச்சியாக உயர்ந்து கடந்த டிச. 4-ம் தேதி பவுன் ரூ.47,800என்னும் புதிய உச்சத்தை அடைந் தது.
பின்னர் கடந்த மார்ச் 28-ம் தேதிஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது. அதன் பின்னர் ஏறுமுகத்திலேயே தங்கம் விலை காணப்படுகிறது.
குறிப்பாக கடந்த ஏப்.19-ம் தேதி ரூ.55,120 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது. இதைத் தொடர்ந்து விலை ஏற்ற இறக்கமாக இருந்த நிலையில், நேற்று பவுனுக்கு ரூ.640 அதிகரித்து ஒரு பவுன் தங்கம் ரூ.53,720 என்ற விலையில் விற்பனையானது.
கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,715-க்குவிற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.57,480-க்கு விற்கப்பட்டது.