பிரதிநிதித்துவப் படம் 
வணிகம்

தக்காளி விலை சரிவு: கிலோ ரூ.10-க்கு விற்பனை @ மதுரை

செய்திப்பிரிவு

மதுரை: மதுரையில் தக்காளி விலை கிலோ ரூ.10 ஆக குறைந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரே நேரத்தில் தமிழகத்திலும், வட மாநிலங்களிலும் பெய்த மழையால் தக்காளி வரத்து குறைந்தது. அதனால், தமிழகத்தில் தக்காளி விலை கிலோ ரூ.150 வரை விற்பனையானது. அதன் பின்பு உள்ளூர் தக்காளி வரத்து அதிகரித்ததால் விலை குறைய ஆரம்பித்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனையாநது. இந்நிலையில், தற்போது தக்காளி விலை கிலோ ரூ.10 ஆக குறைந்தது.

SCROLL FOR NEXT