தங்கம் விலை நிலவரம் 
வணிகம்

தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு சவரன் ரூ.52,000-க்கு விற்பனை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் தங்கம் விலை புதன்கிழமை காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி தங்கம் ஒரு கிராம் ரூ.6430-க்கும், ஒரு சவரன் ரூ. 51,440-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் தங்கம் விலை புதன்கிழமை காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.560 அதிகரித்து விற்பனையாகி வருகிறது. அதோடு, ஒரு கிராம் தங்கம் ரூ.6,500க்கும், ஒரு சவரன் ரூ.52,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 2 அதிகரித்து ரூ.84-க்கும் ஒரு கிலோ ரூ.84,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

SCROLL FOR NEXT