வணிகம்

தெற்கு ரயில்வே ரூ.12,000 கோடியை ஈட்டி சாதனை

செய்திப்பிரிவு

சென்னை: தெற்கு ரயில்வேயில் பல்வேறுபிரிவுகளில் கடந்த நிதியாண்டில் (2023-24) மொத்த வருவாய் ரூ.12,020 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த நிதியாண்டுடன் (2022-23) ஒப்பிடும் போது, சுமார் 10 சதவீதம் அதிகமாகும்.

பயணிகள் ரயில் போக்குவரத்து மூலமாக ரூ.7,151 கோடிவருவாயும், சரக்கு போக்குவரத்து மூலமாக ரூ.3,674 கோடி வருவாயும் ஈட்டப்பட்டுள்ளது. மற்றப் பிரிவுகள் மூலமாக, ரூ.1,195 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இதுதவிர, பாரத் கவுரவ் ரயில் திட்டம் மூலமாக ரூ.34 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இந்தத் தகவல் தெற்கு ரயில்வேசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT