$ விமானப்படை முன்னாள் தலைமைத் தளபதி எஸ்.கே. மெஹ்ராவின் மகன். ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து (ஆர்பிஎஸ்) வங்கியின் இந்திய பிரிவுத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்.
$ இதற்கு முன்பு இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் சர்வதேச வங்கிப்பிரிவின் தலைவராக இருந்தார்.
$ 25 வருடங்களுக்கு மேலாக வங்கித்துறையில் பணிபுரிந்து வருகிறார். ஏ.பி.என் ஆம்ரோ வங்கியில் 1991ம் ஆண்டு சேர்ந்தார். அந்த வங்கியை ஆர்பிஎஸ் வாங்கியது.
$ டெல்லி பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டமும், ஐஐஎம் அகமதாபாத்தில் நிர்வாகப்படிப்பும் படித்தவர்.
$ இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜனுக்கு ஒரு வருடம் சீனியர் இவர். ஏ.என்.இசட் கிரிண்ட்லேஸ் வங்கியின் நிர்வாகப் பணியாளராக வங்கிப்பணி வாழ்க்கையைத் தொடங்கினார்.
$ ஐஐஎம்-ல் படித்த காலம் மிகவும் கடினமானது. உடன் படிக்கும் நண்பர்கள் நல்ல ரேங்க் வாங்கியவர்கள். ஆசிரியர்களும் நம்மை சோதிப்பார்கள். ஆனால் அந்த அனுபவம்தான் என்னை பல இடங்களில் பொறுமையாக இருக்க வைத்திருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்.