குமாரபாளையத்தில் உள்ள டேப் மிஷின் கூடம் ஒன்றில் அரசியல் கட்சியினர் பயன்படுத்தும் மப்ளர் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள். 
வணிகம்

குமாரபாளையம் பகுதியில் அரசியல் கட்சி துண்டு, மப்ளர் தயாரிப்பு பணி தீவிரம்

செய்திப்பிரிவு

நாமக்கல்: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, குமாரபாளையம் பகுதியில் உள்ள விசைத்தறி கூடங்களில் அரசியல் கட்சியினர் பயன்படுத்தும் மப்ளர், துண்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குமாரபாளையம் அதன் சுற்றுவட்டாரத்தில் விசைத் தறித் தொழில் பிரதானமாக உள்ளது. இங்கு வேட்டி, துண்டு உள்ளிட்ட பல்வேறு ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது, மக்களவைத் தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளதால் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தயாராகி வருகின்றனர். தேர்தல் பிரச்சாரத்தால், கட்சிக் கொடி மற்றும் சின்னம் பொறித்த துண்டு, மப்ளர்களின் தேவை அதிகரித்துள்ளது.

இதை மையப்படுத்தி குமாரபாளையம் சுற்று வட்டாரத்தில் உள்ள டேப் மிஷின்களில் ( சிறிய விசைத் தறி ) அரசியல் கட்சி கொடி, கட்சி சின்னம் பொறித்த துண்டு, மப்ளர்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு அரசியல் கட்சியினர் நேரடியாகவும் வந்து மொத்தமாக அவர்களது கட்சி சின்னம் பொறித்த துண்டு, மப்ளர், வேட்டிகளை கொள்முதல் செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT