வணிகம்

சுங்கச்சாவடி வசூலில் 97% மின்னணு பரிவர்த்தனை: என்பிசிஐ சிஇஓ

செய்திப்பிரிவு

மும்பை: நாட்டில் அமைந்துள்ள நெடுஞ்சாலை சுங்கச்சாவடி வசூலில் 97% மின்னணு பரிவர்த்தனை பங்கு வகித்து வருவதாக நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் சிஇஓ திலீப் அஸ்பே தெரிவித்துள்ளார்.

“எப்படி நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் யுபிஐ வளர்ச்சி பெற்றுள்ளதோ அதே அளவிலான வளர்ச்சியை ஃபாஸ்டேகும் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதன் மூலம் நாட்டில் சுங்கச்சாவடி வசூலில் 97% மின்னணு பரிவர்த்தனை பங்கு வகிக்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மின்னணு கட்டண வசூல் முறையின் செயல்திறனை மேலும் அதிகரிக்க, சுங்கச்சாவடிகளில் தடையற்ற இயக்கத்தை வழங்கவும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ‘ஒரு வாகனம், ஒரு ஃபாஸ்டேக்’ முன்முயற்சியை முன்னெடுத்தது. இது பல வாகனங்களுக்கு ஒரே ஃபாஸ்டேக்கைப் பயன்படுத்துவது அல்லது ஒரு குறிப்பிட்ட வாகனத்துடன் பல ஃபாஸ்டேக்குகளை இணைப்பது போன்ற பயனர் நடவடிக்கைகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

SCROLL FOR NEXT